"கலையை அறிவோம்"

கலைகளையும் கலைஞர்களையும் ஆவணப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வரும்"கலையின் குரல்" அமைப்பின் கலை அறிவோம் நிகழ்வு 06 பாவனை நாடகக் கலையின் அறிமுக பயிற்சி தூத்துக்குடி புரூஸ்லீ தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக வீதி நாடக கலைஞர் கலைச்சுடர்மணி பா.செந்தில்வேல் அவர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயிற்சியாளரைக் குறித்த அறிமுகத்தை கலையின் குரல் அமைப்பின் நிறுவனர் கலைவளர்மணி ப.சக்திவேல் வழங்கினார். 



தொடர்ந்து பாவனை நாடகத்தைப் பற்றிய அறிமுகத்தையும் உடல்மொழி, முகபாவனைகள், நகர்வுகள் மற்றும் கோமாளித்திறன் நடிப்பு போன்ற பயிற்சிகளை மதுரை நடன மற்றும் நாடகப்பள்ளி நிறுவனர் தோழர். மைம் உமேஷ் அவர்கள் வழங்க பங்கேற்பாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர். 


கலையின் குரல் அமைப்பின் செயல்பாடுகளையும் பயிற்சிகளையும் குறித்து தமிழ்நாடு கலை இலக்கிய  பெருமன்றத்தின் தாளமுத்து நகர் கிளைச் செயலாளர் தோழர் செ.அந்தோணி லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார். 


அடுத்ததாக பயிற்சியாளர் மைம் உமேஷ் அவர்களை வாழ்த்தி நெடுஞ்சாலை கவிஞர் தா.செல்வராஜ் அவர்கள் வாழ்த்து கவிதை பாடி சிறப்பித்தார்.


பயிற்சியாளர் தோழர் மைம் உமேஷ் அவர்களுக்கு ஓய்வு பெற்ற கருவூலத்துறை அதிகாரி திரு எம்.எஸ்.செய்யது முகமது ஷெரீப் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார். தொடுவானம் கலை இலக்கிய பேரவையின் தலைவர் கவிஞர் நெல்லை தேவன் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 


இறுதியாக கலைவளர்மணி ப.சக்திவேல் அவர்கள்  நன்றியுரை கூறி நிகழ்வை நிறைவு செய்தார். நவீன நாடகக் கலைஞர் ரமேஷ் அவர்களின்  நெறியாளுகையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 


நிகழ்வில் ஸ்பிக்  ஓய்வு பெற்ற அதிகாரி திரு.செல்வின், ஆசிரியர்கள் சேவியர் மெத்தோடியஸ், பிரபாவதி, மகாலட்சுமி, இலக்கிய ஆர்வலர்கள் து.பத்மநாதன், தே.தனசேகர், உதவி இயக்குனர் முத்துராம்சரண், ஈரோடு மரபு நாடகக்களம் குழுவினர் மற்றும் மாணவ மாணவியர் பலர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்