முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வைத்து குரங்காட்டி வித்தை காட்டும் அமைச்சர் கடம்பூர் ராஜீ – முன்னாள் எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆவேசம் N


 அமைச்சர் கடம்பூர் ராஜீ மீது – முன்னாள் எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆவேச பேச்சு
 தலைமைக்கு கட்டுப்படாதவர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ, தனது எம்.எல்.ஏ.பதவியை வைத்து இவர்களை குரங்காட்டி வித்தை காட்டி கொண்டு இருக்கிறார். யாரை இபிஎஸ், ஒபிஎஸ் இருவரையும், குரங்காட்டி எவ்வளவு தூரம் ஓட முடியும் என்பதனை இந்த தேர்தலில் ஓட வீட்டு காண்பிக்கிறோம், டி.டி.வி தினகரன் மட்டுமல்ல இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் ஒன்று சேர வேண்டும், ஜெயலலிதா மறைவு அதை ஓபிஎஸ் தவறான வழிக்கு இழுத்து சென்று விட்டதாகவும் தனது செய்தி தொடர்பாளர் பதவி இராஜினாமா செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. அதிமுக, திமுக கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றும், இதில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.மான ஜீவி.மார்க்கண்டேயனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்த்த இருந்த நிலையில் அவருக்கு மறுக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் ஜீவி.மார்க்கண்டேயன் அவருக்கு சொந்தமான இடத்தில் கட்சி நிர்வாகிகள், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுக கூட்டணி அமைவதற்கு கடுமையாக பாடுபட்டேன், தேசத்தில் பாதுகாப்பான ஆட்சி அமைய  வேண்டும் என்று தலைமை நினைக்கும் போது, நோட்டாவிற்கு கீழ் வாங்கும் கட்சி என்று பா.ஜ.க பற்றி அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ விமர்சனம் செய்தார், அப்படி பட்டவரால் எப்படி வெற்றி பெறவைக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் தேர்தல் பொறுப்பாளரில் இருந்து அவரை எடுக்க பலமுறை வலியுறுத்தினேன், தொடர்ந்து பணியாற்றினால் அதிமுக கூட்டணி 3வது இடத்திற்கு போய் விடும் என்று கூறினேன், ஆனால் தலைமை எனது கருத்தினை செவிமெடுக்கவில்லை, எனது செய்தி தொடர்பாளர் பணியை இராஜினாமா செய்து விட்டேன், தலைமை முடிவு எடுத்து என்னை மீண்டும் வேட்பாளராக அறிவித்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,  தற்போது எங்கள் தலைவர் இல்லை, குடும்ப சண்டையில் உள்கட்சி பூசல் காரணமாக கட்சி 2யாக பிரிந்துள்ளது., யார்? யாரோ தங்கள் சுயநலத்திற்காக இந்த கட்சியை பிரித்து வைத்துள்ளனர்.இந்த கட்சி மீண்டும் ஒன்று சேர வேண்டும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும், டி.டி.வி தினகரன் மட்டுமல்ல இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் ஒன்று சேர வேண்டும், ஜெயலலிதா மறைவிற்கு சசிகலா குடும்பத்தினர் காரணமாக இருக்கலாம் என்ற வேதனை, அதை ஓபிஎஸ் தவறான வழிக்கு இழுத்து சென்று விட்டார். தர்மயுத்த நாயகனாக இருக்கும் அவர் தனியாக டி.டிவி.தினகரனை சந்தித்த போதில் இருந்து, அன்றையில் இருந்து கட்சி தொண்டர்களுக்கு ஐயப்பாடு வந்துவிட்டது.இரட்டை தலைமையில் ஓபிஎஸ் அவருடைய மகனுக்கு சீட் வாங்குகிறார், மற்றவர்களுக்கு விடுகிறார் என்றார் கட்சிக்கு அவமானம். அவரே தலைமையை மிரட்டுகிறார். நல்ல தலைமை விரைவில் வரும் என்று நம்புகிறேன். கடந்த 3 மாதகாலத்திற்கு முன்பே திட்டமிட்டு, திமுகவுடன் கைகோர்த்து, திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது அவர் போட்ட சதி, கனிமொழியிடம் கையூட்டு பெற்றுவிட்டார் என்பதற்காக நாங்கள் வேதனையில் உள்ளோம், நாங்கள் சுயேட்சையாக போட்டியிடவில்லை, நாங்கள் தான் அதிமுக, பன்னீர்செல்வம் தான் சுயேட்சை. மற்ற 17 தொகுதிகளிலும் இதே நிலை தான், உறுதியாக இந்த கப்பல் நீந்தி கடக்க முடியாது. தேர்தல் களத்திற்கு பின்பு அதிமுக ஒரே தலைமை கீழ் ஒன்று சேரும், தர்மயுத்த நாயகன் ஒரு ஆண்டில் தனது செல்வாக்கை இழந்து விட்டார். எனக்கு சீட் தர தயாராக இருந்த முதல்வர், கடம்பூர் ராஜீ தான் ராஜினிமா செய்வதாக மிரட்டுவதாக கூறுகின்றார். முதல்வரால் தைரியமாக முடிவு எடுக்கவில்லை, அமமுக அதிமுகவின் ஒரு பிரிவு, ஒரு கூட்டு முயற்சியாக நாங்கள் தேர்தல் களத்தினை சந்திக்க தயாராக உள்ளோம், தலைமையை மாற்றுகின்ற சக்தி தொண்டர்களுக்கு இருக்கிறது. அதிமுகவில் ஒரு புரட்சி நடக்கும், புதிய தலைமையை தேர்வு செய்வோம், மாற்றத்தை நோக்கி அதிமுக செல்கிறது. இந்த இயக்கத்தின் உண்மையான தொண்டன் தலைவராக வருவார், மிக விரைவில் நடக்கும், தலைமைக்கு கட்டுப்படாதவர் அமைச்சர் கடம்பூர் ராஜீ, தனது எம்.எல்.ஏ.பதவியை வைத்து இவர்களை குரங்காட்டி வித்தை காட்டி கொண்டு இருக்கிறார். யாரை இபிஎஸ், ஒபிஎஸ் இருவரையும், குரங்காட்டி எவ்வளவு தூரம் ஓட முடியும் என்பதனை இந்த தேர்தலில் ஓட வீட்டு காண்பிக்கிறோம் என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...