முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலி இ பாஸ் மூலம் வருபவர்களை தடுக்க நடவடிக்கை

போலி இ பாஸ் மூலம் வருபவர்களை தடுக்க நடவடிக்கை                                                             போலி இபாஸ்  மூலம் வருபவர்களை தடுப்பதற்காக மாவட்ட எல்கை பகுதிகளில் க்யூஆர் ஸ்கேனர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 16,536 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 398பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3பேர் இறந்துள்ளனர். 316பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 95பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 20பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. 

மகராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 398பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். இதில் 185பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த 2 வார காலத்தில் துக்கவீடு, திருமண வீட்டிற்கு வந்தவர்கள் மூலம் 89பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்திருப்பேரை, காயல்பட்டணம் ஆகிய பகுதிக்கு அதிகம் பேர் வந்துள்ளனர். இவர்களுடன் நேரடி தொடர்புடைய 50பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த மே 4 முதல் 3568பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளனர். இதில் மகராஷ்ட்ராவில் இருந்து மட்டும் 2685பேர் வந்துள்ளனர். இதில் 158பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து மே 4 முதல் இன்று வரை 8396பேர் வந்துள்ளனர். விமானம் மூலம் மற்ற மாவட்டங்களில இருந்து சுமார் 16,000 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு நபருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது, இதனால் 3 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் சளி மாதிரி பரிசோதனை செய்ய ஏற்கனவே ஒரு எந்திரம் உள்ள நிலையில், ரூ.15லட்சம் செலவில் மேலும் ஒரு எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவுகிறது. வெளி மாவட்டங்களில் பைக்குகளில் வரும் சில நபர்கள் சோதனை சாவடியில் சோதனைக்கு உட்படாமல் ரகசியமாக ஊருக்குள் நுழைந்து விடுகின்றனர். இதனால் கரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் புதிதாக வந்த நபர்கள் குறித்து காவல்துறைக்கோ, சுகாதார துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து மாஸ்க் அணிய வேண்டும், பொது இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் 1500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. திருச்செந்தூர், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 இடங்களில் தனிமைப்படுத்தும் மையம் தயார் நிலையில் உள்ளது. போலி இபாஸ் மூலம் வருபவர்களை தடுப்பதற்காக மாவட்ட எல்கை பகுதிகளில் கியூஆர் ஸ்கேனர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்கேன் செய்யும்போது போலி எனத் தெரியவந்தால் சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். என ஆடசியர் தெரிவித்தார். பேட்டியின் போது மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உடன் இருந்தனர்  போலி இ பாஸ் மூலம் வருபவர்களை தடுக்க நடவடிக்கை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...