முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்து அறநிலை துறை சார்பில் கோவில் திருப்பணிகள் துவக்கம்

 



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்க கொடிமரம் திருப்பணி, அத்தைகொண்டானில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 135 அடி உயரத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிகள் ஆகிய பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர்  எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்து அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்க கொடிமரம் திருப்பணி, அத்தைகொண்டானில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 135 அடி உயரத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிகள் துவக்க விழா இன்று (11.02.2021) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்க கொடிமரம் திருப்பணி, அத்தைகொண்டானில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 135 அடி உயரத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிகள் ஆகிய பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பின்னர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் 11 மண்டல இணை ஆணையர் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. கூடுதலாக 9 மண்டல இணை ஆணையர் அலுவலகங்கள் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில்110 விதியின் கீழ் அறிவிகப்பட்டது. அந்த வகையில் இன்று ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு தனியாக இணை ஆணையர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் கோவிலில் 135 அடி உயரத்தில் 123 அடி சிலையும் 12 அடி பீடத்துடன் முருகன் சிலை அமைப்பதற்கு இன்று கால்கோல் விழா செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து படிப்படியாக மீட்க மாண்புமிகு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். படிப்படியாக இவை மீட்கப்பட்டு கோவில் கணக்கில் சேர்க்கப்படும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ரூ.28 கோடி மதிப்பில் யாத்ரி நிவாஸ் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்த பழைய அறைகள் பழைய அறைகள் பழுதடைந்து உள்ளதால் பக்தர்கள் தங்குவதற்கு வழங்கப்படாமல் உள்ளது. திருச்செந்தூர் கோவிலில் வெளி பிரகாரம் தற்காலிக அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக பிரகாரம் கட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும். பழனி முருகன் கோவில் பிரசாதம் தபால் துறையின் மூலம் வழங்கப்படுவதை போல தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களின் பிரசாதங்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். படிப்படியாக தொடங்கப்படும். கடந்த 4 ஆண்டுகளில் கிட்டதட்ட 12000 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் ஆகம விதி அடிப்படையில் 12 ஆண்டுகள் முடிந்த திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

கோவில்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் திரு.விஜயபாலமுருகன் அவர்கள் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் தங்க கொடிமரம் அமைக்க நன்கொடையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் திரு.பரஞ்ஜோதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.சத்யா, மலேசியா பத்துமலை முருகன் கோவில் முருகன் சிலை செய்த ஸ்தபதி திரு.தியாகராஜன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், கோவில்பட்டி வட்டாட்சியர் திரு.மணிகண்டன்,  மாவட்ட கவுன்சிலர் திரு.சந்திரசேகர், உதவி ஆணையர்; திருமதி.ரோஜாலிசுமதா, செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் திருமதி.சிவகளைபிரியா, திருநெல்வேலி மண்டல ஸ்தபதி திரு.செந்தில், ஸ்ரீரெங்கம் திரு.ஆனந்த்ஸ்பதி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்னாள் தக்கார் திரு.ப.தா.கோட்டை மணிகண்டன், முக்கிய பிரமுகர்கள் திரு.விஜயபாண்டியன், திரு.அய்யாத்துரை பாண்டியன், திரு.வண்டானம் கருப்பசாமி, திரு.குருராஜ், திருமதி.ரத்னா, திரு.செல்வகுமார், திரு.சுப்புராஜ், திரு.நீலகண்டன், திரு.பழனிமுருகன், திரு.மகேந்திரன், திரு.சுரேஷ்பாபு மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...