முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்பாக பணியாற்றிய. 31 காவல்துறையினருக்கு பாராட்டு

 


       தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 31 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 

கடந்த 17.05.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பண மோசடி செய்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த நபரை தேடி கண்டுபிடித்து கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சத்தை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன், உதவி ஆய்வாளர் திரு. அரிகண்ணன், முதல் நிலை காவலர் திரு. நாகராஜ், காவலர் திரு. பாலமுருகன், ஊர்காவல் படை காவலர் திரு. ஆறுமுக சங்கர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


கடந்த 19.05.2021 அன்று எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மினி லாரியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருப்பதை கண்டறிந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான அவற்றை பறிமுதல் செய்து, 2 எதிரிகளை கைது செய்த எட்டையாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர்முகமது, உதவி ஆய்வாளர் திரு. பொன்ராஜ், தலைமை காவலர்கள் திரு. காமாட்சி, திரு. செல்லச்சாமி, காவலர் திரு. லட்சுமி நாராயணன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


கடந்த 18.05.2021 அன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடன்குடி சந்தை பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதிக்க வைத்திருந்த 29 மதுபான பாட்டில்கள் மற்றும் மதுபானம் விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் 2,23,030ஃ- பணத்தையும் கைப்பற்றி இரண்டு எதிரிகளை கைது செய்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையற்கரசி, திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,


கடந்த 15.05.2021 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி வள்ளுவர் நகரில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 8 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 45,000ஃ- பணத்தை பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாதவராஜா, காவலர்கள் ராம்சுந்தர், திரு. கருப்பசாமி, தனிப்பிரிவு காவலர் திரு. அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


கடந்த 22.05.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபுத்திரன் மகன் ஜெயகண்ணன் என்பவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 297 மதுபாட்டில்களை கைப்பற்றி எதிரிகள் ஜெகணேஷ் மற்றும் சங்கு கணேசன் ஆகியோரை கைது செய்த தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. வேல்ராஜ், திரு. சிவக்குமார் தலைமைக் காவலர் திரு. பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய முதல் நிலைக் காவலர் திரு. மாணிக்கராஜ், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. சாமுவேல், வடபாக காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. மகாலிங்கம், தென்பாக காவல் நிலைய காவலர்கள் திரு. செந்தில், திரு. திருமணி, முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. முத்துபாண்டி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்

   

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த 66 வழக்குகளில் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 1, நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமைக் காவலர்கள் திருமதி. சத்தியபாமா, திரு. சிவக்குமார், திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்


3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 31 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...