முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் துவக்கம்


 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்

-------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் துவக்க விழா  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.05.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் கூட்டமைப்புகள் மூலம்  தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி விற்பனையை துவக்கி வைத்தனர். 

பின்னர் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். பொதுமக்கள் காய்கறிகளை காலை 10 மணிக்குள் வாங்கும் நிலை இருந்தது. அந்த நேரங்களில் மார்க்கெட் பகுதியில் அதிகமான கூட்டங்கள் சேர்வதை தவிர்க்கும் வகையில் மாவட்டத்தின் கிராமம் மற்றும் பேரூராட்சி, நகர்ப்புற பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்டவைகள் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பகளின் மூலம் நடமாடும் அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நடமாடும் காய்கறி வியாபாரிகளுக்கும் எந்தெந்த பகுதிக்கு செல்லலாம் என வரையறை செய்யப்பட்டு கிராமப்பகுதிகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் கூட்டம் அதிகமாக சேராமல் கொரோனா பரவலை தடுக்க முடியும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை 9662 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளது. இதில் தகுதியுள்ள குழுக்களை இதுபோன்ற விற்பனைக்கு ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொறுப்பு) திரு.லட்சுமணன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் திருமதி.மல்லிகா, திரு.பாலசுந்தரம், திரு.சாமுதுரை, திரு.ரூபன், முக்கிய பிரமுகர்கள்  திரு.உமரிசங்கர், திரு.ராமஜெயம், திரு.ஜெகன், திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஜெயக்கொடி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...