முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் பொதுமக்களின் இல்லம் தேடி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாகனங்களின் விற்பனை

               



தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் பொதுமக்களின் இல்லம் தேடி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாகனங்களின் விற்பனை செய்யும் பணிகளை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் துவக்கி வைத்தார்.

--------------------------

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் பொதுமக்களின் இல்லம் தேடி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாகனங்களின் விற்பனை செய்யும் பணிகளை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் தூத்துக்குடி சென்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும்   (23.05.2021)   அன்று துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களை கொரோனா பரவலில் இருந்து காத்திட தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கில் பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடமாடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கும் வகையில் வாகனத்திற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திடும் வகையில் காய்கறியின் விலைகளை அரசு தினசரி நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.  அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கே காய்கறிகளை பொதுமக்களுக்கும் விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கபடுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 76 வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தின் மூலம் காய்கறி, பழங்கள், மாளிகை பொருட்கள், இறைச்சி, மீன் ஆகியவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் தனியார் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அனுமதி பெற்று விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். 

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களுக்கு அத்யாவசிய பொருட்கள், பழங்கள், பால சரக்குகள், இறைச்சி மற்றும் மீன் போன்ற பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதுபோல ஊரக பகுதிகளுக்கும் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார்களும் இதுபோன்று நடமாடும் வாகனத்தின் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்கு சேவை கட்டணங்கள் எதுவும் அரசுக்கு செலுத்த வேண்டியது இல்லை. 

அத்யாவசிய தேவை பொருட்கள் தேவை என எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் இந்த ஊரடங்கு காலத்தில் மாநகராட்சி பகுதியில் தொடர்பு கொள்ள  ஹெல்ப் லைன் எண் 6383755245 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மொபைல் வாகனங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடத்துவதை துவக்கி வைத்தார்கள். இந்த முகாம்கள் மூலம் இதுவரை 4000 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.


18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காக அதிக அளவிலான தடுப்பூசிகளை பெற்றுள்ளார்கள். அதன் அடிப்படையில் இன்றைய தினம் நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 26500 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் தொற்று விரியத்தில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும். அனைத்து கிராம ஆரம்ப சுகாதார மையங்கள்,  நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், தூத்துக்குடி மாநகராட்சி பொறுத்த வரை சென்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.போஸ்கோராஜா, உதவி ஆணையர்கள் திரு.சரவணன், திரு.தனசிங், திரு.சேகர், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) திரு.ரங்கநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...