இடுகைகள்

ஆகஸ்ட் 18, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கைம் பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம்

படம்
  கைம் பெண்கள் நல்வாழ்வு  சங்க பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட் டம்  தூத்துக்குடி VE ரோட்டில் அமைந்துள்ள தொழிற் சங்ககூட கட்டிடத்தில் நேற்று (16-08-2026) ஞாயிற்று கிழமை மாலை  5.00 .மணியளவில் இக்கூட்டம் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவி சங்கீதா ரமேஷ்  தலைமை தாங்கினார் சங்க ஆலோசகர் இரா.மாடசாமி முன்னிலை வகித்தார் , சிறப்பு விருந்தினர்களாக   தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாவட்ட தலைவர் M.ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற கான் வென்ட் ஆசிரியை தேவகி மற்றும்  மின்னல் அம்ஜத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்   கூட்டத்தில் சங்கச் செயலாளர் வேளாங்கண்ணி துணைத்தலைவர்கள் M. வள்ளி.J- நிர்மலா மற்றும் இணைச் செயலாளர் N. இந்துமதி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்கள்   இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்கான முக்கிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்