முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய முதலிட்டு நிதி மற்றும்  வங்கி கிளைகள் வாரியாக 129 மகளிர் சுய


உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பிலான கடன் உதவிகளையும், சமுதாய முதலிட்டு நிதியின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் ரூ.4.72 கோடி மதிப்பிலான மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

---------------------------------



 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய முதலிட்டு நிதி மற்றும்  வங்கி கிளைகள் வாரியாக 129 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பிலான கடன் உதவிகளையும், சமுதாய முதலிட்டு நிதியின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் ரூ.4.72 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (07.08.2021) நடைபெற்றது.  நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு  நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100 நபர்களுக்கு 18 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. மேலும் வருவாய் துறையின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனு அளித்த பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகியோர்களின் உதவித்தொகைக்கான உத்தரவினையும், 43 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் வழங்கினார்.


பின்னர் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது:


மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நலிவுற்றோருக்கு வாழ்வில் பின்தங்கியவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக பல்வேறு திட்டங்களை மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சுய உதவிக்குழுக்களில் உள்ள நலிவுற்றோருக்கு வாழ்வில் பின்தங்கியவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 129 குழுக்களுக்கு வங்கி கிளையின்; மூலம் ரூ.4.64 கோடிக்கான காசோலையினையும், சமுதாய முதலிட்டு நிதியின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் ஆகியோர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவி குழுவில் ஒரு குழுவாக அமைந்து வாழ்வில் முன்னேற வேண்டும். மீன்வள துறையின் மூலம் பாசி வளர்;ப்பு திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தி,மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் திரு.உமரிசங்கர், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் திரு.பிச்சை, திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகேசன், உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ்சிங், இ.கா.ப., வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.அலமேலு, கனரா பேங்க் உதவி பொது மேலாளர் திரு.சின.எஸ்.தேவ், முக்கிய பிரமுகர்கள், திரு.செங்குளி ரமேஷ், திரு.ஜெகன், திரு.ராமஜெயம், திரு.வால்சுடலை, திரு.ஜெபமாலை மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...