முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்

 


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  துவக்கி வைத்தார்.

------------------------

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி இன்று (04.07.2021) இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  கலந்து கொண்டு, தடுப்பூசி போடும் முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்ககளை கொரோனா பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் ஒன்றிய அரசிலிருந்து அதிக அளவிலான தடுப்பூசிகளை பெற்று, தமிழகமெங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்கள். விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவனம் சார்பில் நிறுவன பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தடுப்பூசி போட வாருங்கள் என அழைத்த நிலை மாற்றப்பட்டு பொது மக்கள் தடுப்பூசி எப்போது போட வருவீர்கள் என கேட்கும் நிலை உருவாகி உள்ளது.                                                                                                                         


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை செய்து வருகிறார்கள். கேரளா மாநிலத்தில் இருந்து தான் அதிக மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதை எளிமையாக்கி விரைவில் அனுமதி பெறுமாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். நமது மாவட்டத்திலும் இது போன்ற அனுமதிகறள் விரைந்து வழங்கப்பட்டு தமிழகமும் அதிக மீன் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நன்னீர் மீன்வளர்ப்பு ஆந்திர மாநிலத்தில் அதிகம் உள்ளது. அதைப்போலவே தமிழகத்திலும், நன்னீர் மீன்வளர்ப்பு அதிகரித்திட பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பேசினார். 

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, திமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் திரு.எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, ஏரல் வட்டாட்சியர் திரு.இசக்கிராஜ், விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன தலைமை இயக்குநர் திரு.ஜெகதீசன், நிர்வாக இயக்குநர்கள் திரு.செந்தில்ராஜன், திரு.சுப்புராஜன், மேலாளர் திரு.தாமஸ், முக்கிய பிரமுகர்கள் திரு.ராமஜெயம், திரு.பி.கே.ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...