முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் திடீர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

 



கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக       தூத்துக்குடியில் பெரும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது  


இந்த நிலையில் தூத்துக்குடி  ( சேது பாதை  ரோடு  ) ராமேஸ்வரம் செல்லும் சாலை  பகுதியில்   அமைந்துள்ள ஆ.சண்முகபுரம் ஆரோக்கியபுரம். மாதா நகர் கிழக்கு - சோட்டையன் தோப்பு ,பகுதிகளில் உள்ள தெருக்கள். மற்றும் குடியிருப்பு பகுதியிலும்  வீட்டுக்குள்ளேயும் நீர்  புகுந்ததால்  குழந்தைகள், முதியவர் மிகவும் பாதித்துவருவதோடு நோய் தொற்று புரவும் நிலை ஏற்படும் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்



இந்தபகுதிகளில்  ஆக்கிரமிப்பினால்  நீர் ஓடைகள்  அடைக்கப்பட்டதோடு அந்த நீர் ஓடைகள்  இருந்த இடம் தெரியாமல்  போனதால்...  மழை நீர்  தெருக்களையும்,  வீடுகளையும் ஆக்கிரமித்து சூழ்ந்து கொண்டது.

தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் , இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டி    ஆ.சண்முகபுரம் ஆரோக்கியபுரம். மாதா நகர் கிழக்கு - சோட்டையன் தோப்பு , ராஜபாளையம் , பகுதிகளில் உள்ள மக்கள்      6-12-2021  திங்கள் கிழமை அன்று காலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர்  . இந்த திடீர் சாலை மறியலால் சுமார் 3 மணி நேர த்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது 




இந்த சாலை மறியல் பற்றி தகவல் அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் - வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி துரிதமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து பின் ஆர்ப்பாட்டத்தினர் கலைந்து சென்றார்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...