முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினமும் விபத்தை சந்திக்க நேரிடும் சாலை பிரிவுகள் - குழப்பத்தில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஒட்டிகள்.


தூத்துக்குடி மாநகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான இரண்டாம் கேட்டிலிருந்து நான்காம் கேட். வரையிலான சாலையாகும். இந்த சாலையானது, மேலூர் ரயில் நிலையமும், புதிய பேருந்து நிலையமும், பள்ளிக்கூடமும், திருமண மண்டபங்களும், இருப்பதால்... மக்கள் பயன் படுத்தும் முக்கிய சாலையாக கருதப்படுகிறது.                                      இருசக்கர வாகன ஒட்டிகள்  இந்த சாலையில் நான்காம் கேட் அல்லது  புதிய பேருந்து நிலையம் செல்ல  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழே கடந்து செல்ல வேண்டும்.  இந்த பாலத்தின் கீழே கடந்து  இடதுபுறமாக செல்கின்ற வாகனங்களை பின் தொடரும்  சில இரு சக்கர வாகன ஒட்டிகள் முந்தி செல்வதற்காக பாலத்தின் இரு பக்கமும் இருக்கின்ற  இரு துண்களுக்கு இடையே   மின்னல் வேகத்தில் நழைந்து முன் செல்கின்ற வாகனத்தை கடக்கி றார்கள். இவ்வாறு இரு தூண்களுக்கு இடையே மின்னல் வேகத்தில் கடந்து செல்வதால் எதிரே வருகின்ற லாகளங்கள்  மற்றும் பாலத்தின் கீழ் புதிய பேருந்து நிலைத்திற்கு செல்லும்  பேருந்துகள் அல்லது இதர லாகனங்கள் மீது மோதுகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த  இடத்தில் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் இரு தூண்களுக்கு இடையே தடுப்பு  அல்லது வேகத்தடை  அமைத்தால் நலமாக இருக்கும் என  விபத்தை சந்திக்காமல்  நூல் இழையில்   உயிர் தப்பிக்கும் வாகன ஒட்டிகளின் வேண்டுதலாக இருக்கிறது.  எனவே மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை உரிய  நடவடிக்கையை துரிதமாக எடுத்தால் ..  வாகன விபத்து ஏற்படாமல் தடுக்கலாமே!                                                                                                                                     "நமது எழுத்தாணி" 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...