எழுத்தாளர் மு.செல்வத்துரை அவர்களை அமெரிக்க தமிழ் பல்கலைகழகம் பாராட்டி கெளரவிப்பு ,

தூத்துக்குடி மாவட்டம்   எட்டையாபுரத்திற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகவீரபாண்டியாபுரம் என்ற  கிராமத்தில் பிறந்தவர்தான் எழுத்தாளர், திரு மு.செல்வத்துரை.       இவர் கடந்த 23-06-2018 அன்று தூத்துக்குடியில் 'கருப்பண்ணனின் கரிசல் மண்  ஞாபகங்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த நூலில்  தனது கிராமத்தில்... , தான் வாழ்ந்த  குழந்தை பருவம் - பள்ளி பருவம் கிராமத்தின் சூழல் - விவசாயம் என தனது அனுபவங்களளோடு -  தான் அறிந்த தகவல்களை எதிர்கால சந்ததியர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எழுத்தாளர் செல்வத்துரையின் கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள் நூல்அமைந்திருக்கிறது. இந்த நூலை   பாராட்டி அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது;

கடந்த 19-08-2018 அன்று மதுரை போப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளைசார்ந்த சாதனை புரிந்த  சாதனையாளர்களுக்கும்  முனைவர் பட்டமும் ,கலை - இலக்கியம்-இறையியல் -கல்வி மருத்துவம்  என  எழுத்து மூலமாக எழுத்தாளர்களாக  இந்த மனித சமுதாயத்தையும்- தேசத்தையும்,இயற்கையும் ,இறைவனையும் நேசித்து. பல தொண்டுளை செய்துவரும் எழுத்தாளர்களுக்கு பாராட்டி சான்றிதழும். வழங்கப்பட்டது

 மணிமேகலை பிரசுரம்  ரவிதமிழ்வாணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தவிழாவில்  அமெரிக்க உலக தமிழ் பல்கலைகழகத்தின் வேந்தர் செல்வின் குமார்  அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...சாதனையாளர்களுக்கும்  எழுத்தாளர்களுக்கு பட்டமும்,பாராட்டு சான்றிதழும் வழங்கினார். மேலும் இந்த விழாவிற்கு  எழுத்தாளர் செல்வத்துரை அவர்களின் மனைவி முத்துலெட்சுமி,மகன் லெனின்துரை,மருமகள்விமலா,  பேத்தி  நிஷி கா டாக்டர் சிவனாகரன் ,எ.துரை ,
எ.செல்வ மூத்தி,கருப்பையா,கண்ணய்யா, ஞாணத்துரை,வீராச்சாமி, இருளப்பன்
இந்திரா,பாண்டியராஜன்,வ.உ.சி துறைமுகம் மு.முருகேசன் இ.சிவகாமிநாதன் , என  இது போன்று  பட்டம் மற்றும் பாராட்டு பெற்ற எழுத்தாளர்களின் குடும்பத்தினர் ,நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
  






          

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்