2 லது நாளாக தொடரும் தர்ணா .. அதிரடி படையினர் குவிப்பு


 பிப்: 14. 02.2019
புதுச்சேரி : புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக ஆளுநர் மாளிகையில் மத்திய அதிரடிப்படை மற்றும் தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்தும் விவகாரம் தொடர்பாக அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நேற்று முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். நாராயணசாமி மற்றும் அம்மாநில காங்கிர கட்சியின் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகை முன் விடியவிடிய நடத்தய போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.
       இரவில் ஆளுநர் மாளிகைக்கு வந்த டிஜிபி சுந்தரி நந்தா, பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட நாராயணசாமி மறுத்து விட்டார். இந்நிலையில் முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்தால் புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு கருதி மத்திய அதிரடிப்படை மற்றும் தொழிற்பாதுகாப்பு படையினர் கவர்னர் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்