பாரதிக ஜனதா கட்சி சார்பில் இரு சக்கர வாகன பேரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக இரு சக்கர வாகன பேரணி மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு  இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றனர். இதை மாநில அமைப்பு பொதுச் செயலளார் கேசவ விநாயகம் அவர்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி கட்சி அலுவலகம் முன்பு தொடங்கி தேரடி திடல் வரை சென்றடைந்தது.
தலைமை தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் குலசை ரமேஷ், கலந்துகொண்டவர்கள் மாவட்ட துணைத் தலைவர் PM பால்ராஜ்,
 மாவட்ட பொதுச் செயலாளர் சிவராமன், மாவட்ட பொருளாளார் சண்முகசுந்தரம்,சட்டமன்ற பொருப்பாளர் VSR.பிரபு, தெற்கு மண்டலத் தலைவர் சின்னத் தங்கம், கிழக்கு மண்டலத் தலைவர் சந்தனக்குமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்