முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில' மாபெரும் புத்தக திருவிழா

மாபெரும் புத்தக  திருவிழா
அமைச்சர் தொடக்கி வைத்து சிறப்புரை


                                     
                                      
                                       

       


   தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.

        தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில், அக்டோபர் 05 முதல் 13 வரை புத்தகத்திருவிழா கண்காட்சி நடைபெறுகிறது. இதன் துவக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, புத்தகத்திருவிழாவை திறந்து வைத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு புகைப்படக்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்ட பல்வேறு பதிப்பகத்தின் அரங்கங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்

         இந்நிகழ்ச்சியில் நேஷனல் புக் டிரஸ்ட் புதுடில்லி, செயல் உறுப்பினர் .என்.நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்) போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வக்கித்தனர். விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறுகின்ற புத்தகத்திருவிழா ஒரு மாவட்டத்தில் நடைபெறுகின்ற விழாவைகாட்டிலும், ஒரு மாநிலத்தில் நடைபெறுகின்ற விழாவைப்போல் காணப்படுகிறது.
            
   இந்த புத்தகத் திருவிழாவில், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் பயன்பெறுகின்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப்போராட்ட வீரர்கள், தியாகிகள் பிறந்த மண் என்ற பெருமை நமது மாவட்டத்திற்கு உண்டு

        மேலும், நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையிலும், உலகெங்கும் அறியச்செய்கின்ற வகையிலும், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரர் சுந்தரலிங்கம், வீரர் வெள்ளையத்தேவன், வீரர் அழகுமுத்துக்கோன், மகாகவி பாரதியார், இசைமேதை நல்லப்பசுவாமிகள், கப்பேலாட்டிய தமிழன் ..சிதம்பரனார், சிறாப்புராணம் இயற்றிய அமுதகவி உமறுப்புலவர் போன்றோர்களின் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு புத்தகத்தை வாசித்தாலும், அந்த கருத்தை மனதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பின்பு நல்ல பண்புகளை தங்களது வாழ்வில் நடைமுறைபடுத்த வேண்டும். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை கட்டாயமாக்கிக் கொண்டால் தங்களது அறிவாற்றல் மேம்பட செய்யும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க அதிக அளவில் இந்த புத்தகத்திருவிழாற்கு வருகை தந்து பல்வேறு சிறப்பு வாய்ந்த எழுத்தளாளர்களின் புத்தங்களை வாங்கி பயன்பெற வேண்டும்

   புத்தகத்திருவிழாவில் புத்தகங்களுக்கு பதிப்பகத்தார் தள்ளுபடிகளும் வழங்குகிறார்கள். இந்த புத்தகத்திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் பார்வைக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்படுகிறது. இந்த புத்தகத்திருவிழாவிற்கு வருகைத்தரும் பொது மக்களுக்கு மைதானத்தில் உணவு அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த புத்தகத்திரவிழாவிற்கு வருகைத்தர ஏதுவாக பேரூந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது மாவட்டத்தில் நடைபெறும் இந்த இரண்டாவது புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் மட்டுமல்லாமல் பொது மக்கள் அதிகளவில் வருகை தந்து இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தின் கொள்ள வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசினார்.

    மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது முறையாக மிக சிறப்பான முறையில் புத்தக திருவிழா அக்டோபர் 5 முதல் 13ம் தேதி நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பகத்தினர் அரங்கங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவிற்கு வரும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் புத்தகங்களை பார்ப்பதற்கும், படிப்பதற்கும் மட்டுமில்லாமல், புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனையும் செய்யப்படுகிறது

     நமது மாவட்டத்தில் புத்தகத்திருவிழாவை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, 

                 புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், தமிழ் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மூலம் பல்வேறு விதமான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிறப்பு வாய்ந்த நபர்கள் உரையாற்ற உள்ளார்கள்

மேலும், இந்த புத்தகத் திருவிழாவிற்கு வருகைத்தரும் அனைவரும் பார்த்து பயன்பெறும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. எனவே, இந்த விடுமறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நேரத்தை பயனுள்ளதாக்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வரவேண்டும். நமது மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய புத்தகங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தக திருவிழா ஏற்பாடுகள் நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து சிறப்பாக செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் வருகை தந்து புத்தக திருவிழாவை பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி வாசிப்பு பழக்கத்தினை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    முன்னதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னனு வாகத்தின் மூலம், ஒளிபரப்பப்பட்ட செய்தி மலரினை பார்வையிட்டார். இன்று (05.10.2019) பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணிவரை தூத்துக்குடி சுப்பiயா வித்யாலயம் பள்ளி மாணவ, மாணவியர்களும், தூத்துக்குடி .பி.சி மகலாலெட்சுமி பெண்கள் கல்லூரி மாணவிகளும் கலந்து கொள்ளும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்;து, தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மூலம் நாட்டிய நிகழ்ச்சியும், கவிஞர் தேவதேவன் கவிதைகள் குறித்து கா.உதயசங்கர் அவர்களும், தமிழக அரசு தொல்லியல் துறை ஆணையர் .உதயச்சந்திரன் அவர்களும் உரையாற்ற உள்ளார்கள். மேலும், புத்தகம் எனும் சிறகு என்ற தலைப்பில் பேராசிரியர் பர்வீன் சுல்தான் அவர்களும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

     தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ..ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்துறை) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் காலோன், நேஷனல் புக் டிரஸ்ட் புதுடில்லி, துணை இயக்குநர் (கண்காட்சி) இம்ரான் ஹக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாலசுப்பிரமணியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார் ஜெரீனா பாக்கியராஜ், ஏசாத்துரை மற்றும் அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
      

   

   
                               

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...