முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா.


தமிழ்நாடு  போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா.

கடலூர் .மார்ச் .11. கடலூர் நகர அரங்கத்தில் தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட தொழிற்சங்க தொடக்கவிழா நல வாரியத்தில் உறுப்பினர்களை இணைக்கும் விழா அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு மாநில செயலாளர் கபாலீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ரமேஷ், பொருளாளர் சரவணன், துணை தலைவர்கள் திருநெல்வேலி சங்கர், திருவண்ணாமலை வீரபாகு, இணைச் செயலாளர்கள் தூத்துக்குடி செந்தில்குமார், கோவை ஜேம்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக ரமேஷ் செயல்பட்டார். கடலூர் மாவட்ட தலைவராக உமாபதி, செயலாளராக கல்யாண முருகன் பொருளாளராக சரவணன், இணைச் செயலாளர்கள் அறிவு, குமாரசாமி ,பாலமுருகன்,
துணைத்தலைவராக மகேஷ்குமார் சுப்பிரமணியன், சிவசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுரேஷ், சக்திவேல், பாலு, பரமசிவம், பொன்னியின் செல்வன், ரமேஷ், மணிகண்டன் வடிவேல் ரமேஷ் மனோகர், சஞ்சீவிகுமார், வடிவேல், விஜயகுமார், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முப்பெரும் விழாவில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. உறுப்பினர்களை நலவாரியத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் எடுக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...