முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோணா தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

கொரோணா தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு   வரும்  தடுப்பு  பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில்  ஆய்வு                                                   . . .                                                                                                                       தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சி தனிமைபடுத்தபட்ட பகுதியில்; மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோய் கட்டுபாட்டு
தடுப்பு பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு  தன்னார்வலர்கள் மூலம்ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் எனவும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்திட
வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடும்போது தினம்தோறும் புதிய முகமூடிகளை அணிந்து பணியாற்றுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.           தனிமைபடுத்தபட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியில் வராமல் சமூக விலகளுடன் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப.,அவர்கள்தெரிவித்தாது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் மே மற்றும் ஜூன்
மாதத்துக்கான ரேசன் பொருட்கள் விலையில்லாமல்குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்கள். அதனடிப்படையில்  நமது மாவட்டத்தில்
குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனிமைபடுத்தபட்ட நபர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ரேசன்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைபடுத்தபட்ட நபர்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து அவர்கள் இடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சி தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வெளி
மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கண்டறிய சோதனை சாவடிகள் அமைக்கபட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது. தனிமைபடுத்தப்பட்டு நபர்கள் ஒருபோதும் தங்களது வீட்டில்
இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும். நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அரசு தெரிவித்துள்ள
வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்க ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஆதிநாதபுரம்ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு உறுதி திட்டத்தின்கீ ழ்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணியாளர்களின் வருகை பட்டியல் மற்றும் பதிவுகளை பார்வையிட்டு, பணியில் ஈடுபடும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க            வேண்டும் எனவும், தினம்தோறும் முககவசங்களை மாற்றி புதிதாக அணிந்து பணியாற்ற
பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, ஏரல்;
வட்டாட்சியர்கள் திருமதி.அற்புதமணி, திரு.முத்துராமன் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சிஅலுவலர்கள்திருமதி.பாக்கியலிலா, திரு.கருப்பசாமி,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.நைனார்; மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளன
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...