முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவில்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு                                                                                                                           தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டவர்மங்களம்
ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ்நகர்; மற்றும் இளம்புவனம் தனிமைபடுத்தபட்ட பகுதியில்; மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                                      மேலும் வ.உ.சி. பள்ளி மைதானத்தில் தற்காலிகமாகசெயல்பட்டுவரும்காய்கறி சந்தை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், காய்கறிகளை
வாங்கிகொண்டுஇருந்தபொதுமக்களையும் சமூக இடைவெளியை பின்பற்ற
அறிவுறுத்தினார்.
மேலும், கோவில்பட்டி பகுதியில் உள்ள கனராவங்கிக்குஅதிகமானபொதுமக்ள் வங்கசேவைக்காகவருகைதந்திருந்தார்கள்.   பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்பார்வையிட்டு, வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் அமர்வதற்கு ஏதுவாக நாற்காலிகள் பயன்படுத்த வேண்டும் எனவும், வங்கிகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயமாக முககவசங்களை அணிந்து
வரவும், வங்கி நுழைவு பகுதியில் சாணிடைசர் வைத்து இருக்க வேண்டும் எனவும், வங்கியில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும், வங்கிக்கு வரும் பொதுமக்களும் முககவசங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை வங்கி மேலாளர் உறுதி
செய்திடவேண்டும்எனஅறிவுறுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:                                                                                                         தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின்
மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று கோவில்பட்டி ஊராட்சி
ஒன்றியம் பாண்டவர்மங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ்நகர்; மற்றும் இளம்புவனம் தனிமைபடுத்தபட்ட பகுதியில்; மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு
பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.                                                                  ராஜிவ்நகர் பகுதியில் 778 வீடுகளில் 2636 மக்களும், இளம்புவனம்; பகுதியில் 630 வீடுகளில் 2306 மக்களும்
தனிமைபடுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் தனிமைபடுத்தபட்ட நபர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய் கட்டுப்பாட்டு தடுப்பு பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியில்வருவதை தவிர்பதற்காகவும், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவால் இருப்பதற்காகவும்,
நடமாடும் காய்கறி அங்காடி வாகனம் மூலம் காய்கறி வாங்க நடவடிக்கைஎடுக்கப்படும்.
மேலும் இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.                            
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில்ப ணிகள மேற்கொள்ள வேண்டாம் எனவும் பணியாளர்களுக்குதெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன் அடிக்கடி கை கழுவ முறைகளை கடைபிடிக்க வேண்டும். சுய ஊரடங்கு
உத்தரவினை முழுமையாக கடைபிடித்து அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.  
                                                                                     
ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.விஜயா, சுகாதார பணிகள் துணைஇயக்குநர்கோவில்பட்டி மரு.அனிதா,வட்டாட்சியர்கள்திரு.மணிகண்டன் (கோவில்பட்டி), திரு.அழகர் (எட்டயபுரம்), கோவில்பட்டி வட்டாரவளர்ச்சிஅலுவலர்கள்திரு.மாணிக்கவாசகம், திருமதி.வசந்தா, கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர்திரு.கஸ்தூரிசுப்புராஜ்,பாண்டவர்மங்களம் ஊராட்சி தலைவர் திருமதி.கவிதா அன்புராஜ், துணைத்தலைவர் திருமதி.ராஜலட்சமி, இளம்புவனம் ஊராட்சி தலைவர் திருமதி.முத்து மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் உட்பட பலர் உள்ளனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...