தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே வணிக வளாகத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் என்னும் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று செல்போன், டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியவர்களுக்கு கடந்த 3 மாதமாக பெனால்டி தொகை வசூலித்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக அரசு மூன்று மாதங்கள் தவணை செலுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள்தவணைசெலுமல் இருந்துள்ளனர். 

ஆனால் அரசு உத்தரவை மீறி இந்நிறுவனம்பெனால்டி வசூலித்துள்ளது. ரூ.4ஆயிரத்திற்கு 920 ரூபாயும், 2ஆயிரத்திற்கு 560 ரூபாயும் பெனால்டி தொகையாக அந்நிறுவனம் வசூலித்துள்ளது.         இதனால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் திரளானோர் அந்த நிதி நிறுவனத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்தியபாகம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனிடையே நிதி நிறுவனம் மூடப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்