தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு


கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

கடந்த 21.07.2020 அன்று இரவு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கே.டி.சி நகரில் அதே பகுதியில் வசித்து வரும் பிரேம்குமார் (27) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட 6 எதிரிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன்உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துகணேஷ்,திரு. நம்பிராஜன், திரு. ராஜபிரபு. திரு. ராஜா,  முதல் நிலைக்காவலர்கள் திரு. முத்துமணி, திரு. கலைவாணர் , திரு. சுப்பிரமணியன்காவலர் திரு. கண்ணன் ஆகியோரின்சிறந்தபணியாற்றியமைக்காகவும்

இணையதள மோசடிய மூலம் பணத்தை இழந்த பொது மக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூபாய் 57.179 /- ஐ கிடைக்கச் செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சுதாகரன் காவலர்கள் திரு. எடிசன். புவனேஷ், திரு. ஷாபு, திரு. சதீஷ்குமார் ஆகியோரின் சிறந்த பணியாற்றியமைக்காகவும்

மேற்படி காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளினர்கள் 14 பேரின்  சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்; ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்