முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் காவல் துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்


 
தூத்துக்குடி  வடபாகம் திரேஸ்புரம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து 
அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்  அவர்கள் தலைமையில்  போலீஸ் பொதுமக்கள்நல்லுறவுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் (04.07.2020) காலை தூத்துக்குடியில்உள்ளதிரேஸ்புரம் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், அது நம்மை பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.                   பின்னர்  தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து அலுவலகத்தில் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். காவல்துறை உங்களுக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக உள்ளது எனவும் உங்களது குறைகளை என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.                                                                                                                                                                                         இந்த  கூட்டத்திற்கு  தூத்துக்குடி   காவல்துறை  கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாகமீனவளத்துறை உதவி இயக்குனர் திருமதி. ஆண்ட்ரோ பிரின்சி வயோலா மற்றும் புஷ்ரா சப்னம், நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து சங்க தலைவர் திரு. ராபர்ட், துணை தலைவர் சேஷையா, செயலாளர் பர்னபாஸ், பொருளாளர் ஜேம்ஸ், ஊர் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...