முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மாவாசை தினத்தில் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க காவல் துறை வேண்டு கோள்

கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், குற்றவியல் 
விசாரணை நடைமுறைச்சட்டம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வதற்காக 
தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் கடற்கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில் ஆற்றங்கரை 
ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில்மற்றும்கடற்கரையோரங்களில் ஆண்டுதோறும் ஆடி, அமாவசை நாளில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் 
மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.                                                  
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 144 (ஊசுPஊ)ன்படி தடை உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருவதாலும், ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் ஏற்பட அபாயம் இருப்பதாலும் பொதுமக்கள் நலன் கருதி 20.07.2020 ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் சடங்கு, சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றங்கரையோர இடங்களில் ஒன்று கூடுவதையும், ஆற்றில் நீராடுவதையும் தவிர்க்குமாறுபொதுமக்கள்அறிவுறுத்தப்படுகிறார்கள்.                                                                                                                        கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுத்து வரும் இது போன்ற நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் 
கண்காணிப்பாளர் திரு.எஸ்ஜெயக்குமார் அவர்கள்பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...