தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது



தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. 

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் ஆண்டுதோறும் நடைபெறும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நிகழாண்டில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் இணைந்து அறிவித்தது.  இதையடுத்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு கொடியேற்றினார். கொடியேற்றம், திருப்பலி சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.  

பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. திருவிழாவையொட்டி சுமார் 700 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்கள் நேரில் வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்