முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது மக்களிடம் எவ்வாறு ? நடந்து கொள்ள வேண்டும் உதவி ஆய்வாளர்களுக்கு ஜ.ஜி - எஸ்.பி அறிவுரை


  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு.பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள்மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.                                                                                                                                                                                                                                                                                                                (04.07.2020)  அன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்களில்; பணிபுரியும் உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை கூட்டம் திருநெல்வேலி சரக டிஐ.ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப மற்றும் மாவட்ட எஸ்.பி. திரு. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலையப்பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைத்தார்கள். பின் உதவி ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                       காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதைநிரூபிக்கும்வகையில்நமதுசெயல்பாடுஇருக்கவேண்டும்என்றும்அறிவுறுத்தினார்கள். மேலும் பொதுமக்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்எச்சரித்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                இக்கூட்டத்தில்காவல்துறைகூடுதல்கண்காணிப்பாளர்திரு.செல்வன்,காவல்துணைகண்காணிப்பாளர்கள், தூத்துக்குடி நகரம் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் திரு. பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் திரு. சுரேஷ்குமார், கோவில்பட்டி திரு.கலைக்கதிரவன், விளாத்திக்குளம் திரு. பீர் மொஹைதீன், சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள்பிரிவு திரு.பழனிக்குமார் மற்றும் மாவட்ட குற்ற ஆவண கூடம் திரு. நாகராஜன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து 
காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...