முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி போக்கு வரத்து காவல் துறைக்கு 100 தடுப்புகள் ( பேரி கார்டுகள் )

14-08-2020   தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறைக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 தடுப்புகள் (பேரிகார்டுகள் )   வழங்கும் நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவுக்கு முதற்கட்டமாக 100 தடுப்புகளை ( பேரிகார்டுகள்) இன்று குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை பிரிவுக்கு தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது மேலாளர் திரு. சுரேந்திரன், மண்டல மேலாளர் திரு. மோகன்ராஜ், முதுநிலை மேலாளர்கள் குமரேசன் மற்றும் முருகேசபாண்டி ஆகியோர் ஒப்படைத்தனர்.

அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பாக தடுப்புகள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும, அதனை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பின் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ், திரு. ராஜாமணி, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...