முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு கடன்




தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


      தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு  மத்திய அரசு அறிவிப்பின்படி மீனவர் கடன் அட்டை வழங்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.                                                                                                                                     

     இத்திட்டத்தின் மூலம் மீன்பண்ணை, இறால் பண்ணை புதியதாக அமைத்தல் மற்றும் புனரமைத்தல், நீர்தேக்கம், குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளர்த்தல், மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் வளர்த்தல், பண்ணை குட்டையில் மீன்குஞ்சுகள் வளர்த்தல், கடலில் கூண்டுகளில் மீன்வளர்த்தல், கடலில் கடற்பாசி வளர்த்தல், மீன் விற்பனை செய்பவர்கள், சங்கு குளிப்பவர்கள், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள், வண்ணமீன் வளர்ப்போர்களுக்கு செயல்பாட்டு செலவுகளுக்கு கடன் அட்டை வழங்கப்படவுள்ளது.                                                                                                                                            

   எனவே இத்திட்டம் குறித்த விண்ணப்பங்கள், விவரங்கள் மற்றும் கூடுதல் ஆலோசனைகளை வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது      0461-2320458 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...