தமிழக முதல்வர் வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் திரு எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

    தமிழக முதல்வர் வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் திரு எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடிக்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் திரு எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


      நாளை (13.10.2020) தூத்துக்குடிக்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு இன்று (12.10.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 5 ஏ.டி.எஸ்.பிக்கள், 19 டி.எஸ்.பிக்கள் 50 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இக்கூட்டத்தில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. கோபி, செல்வன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், தூத்துக்குடி பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர்கள் திரு. அபிஷேக் குப்தா, சிவகங்கை திரு. அரவிந்தன் உட்பட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.  

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்