முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்துதல் - வழக்குகளின் நிலையயை ஆய்வு செய்தல் குறித்து , தூத்துக்குடி மாவட்ட S.P எஸ்- ஜெயக்குமார் உத்தரவு



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்துதல் மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் நிலையயை ஆய்வு செய்தல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளான உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எங்கெங்கெல்;லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் அமைத்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும், 

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை பரிசீலனை செய்து, அதன் மீது தினந்தோறும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 

காவல் துணை கண்காணிப்பாளர்கள் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களை தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அனைத்து காவல் நிலையங்களிலும் தினமும் காலை 07.00 மணிக்கு ஆஜர் அணி வகுப்பு முறையாக நடத்துதல் வேண்டும் எனவும், பொதுமக்களின் புகார்களுக்கு காவல்துறை அதிகாரிகள், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைக்காமல் சம்பவ இடத்திற்கே சென்று விசாரணை நடத்தவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...