முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக அரசின் சார்பில் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் 151 வது பிறந்த நாள் விழா



தூத்துக்குடி வெஸ்ட் காட்டன் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி மக்களால்  தந்தை என போற்றப்படும்  ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் 151 வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

------------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி வெஸ்ட் காட்டன் ரோட்டில்  அமைந்துள்ள தூத்துக்குடி மக்களால்  தந்தை என போற்றப்படும்  ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் 151 வது பிறந்த நாள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம்  தமிழக அரசின் சார்பில் அன்னாரது திருவுருவ  சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும்  நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (15.11.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்;.  இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்) திரு.போ.சின்னப்பன் (விளாத்திகுளம்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார்,இ.கா.ப, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தூத்துக்குடி நகர மக்களால் இன்றாளவும் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களுடைய நினைவுகள் மக்களின் மனதில் காலத்தால் அழியாத ஒன்றாகும். அவர் ஆற்றிய தொண்டு என்றைக்கும் மக்களின் மனதில் அழியாத நினைவு சுவடுகளாக நிலைத்து நிற்கும். அந்த வகையில் பெருமைப் படுத்த வேண்டுமென்று தொடர்ந்து பல காலமாக வைக்கப்பட்ட கோரிக்கை மாண்புகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசால் நிறைவேற்றப்பட்டு அவர்களுடைய பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடிட 24.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று தமிழக அரசின் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம்  விடுதலைபோராட்ட வீரர்கள் தியாக செம்மல்கள் நிறைந்த மண் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை செலுத்திய ஆட்சி என்றால் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சி தான். புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டம்  கயத்தாரில்  வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம், கவர்ணகிரியில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம், வல்லநாட்டில்  வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் ஆகியவை  அமைக்கப்பட்டு அரசின் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருசெந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம், விளாத்திகுளத்தில் இசைமேதை என போற்றப்படும் நல்லப்பசுவாமிகளுக்கு நினைவு தூண், சீரப்புராணம் ஏற்றிய அமுதகவி உமரப்புலவர் அவர்களுக்கு அரசு விழா ஆகியவைகளை அறிவித்து செயல்படுத்தி உள்ளார்கள்.

தூத்துக்குடி நகர மக்களின் பெரும் மதிப்பை பெற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் சிலை நிறுவப்பட்டதற்கு பிறகு இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர்கள் இருந்தும் கூட அவர்கள்  எந்தவீதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மாண்புமிகு புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சி  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன். எங்களது செய்தி மக்கள் தொடர்புத்துறை மானிய கோரிக்கையின் போது 24.03.2020 அன்று தூத்துக்குடி நகர மக்கள் மட்டுமின்றி மீனவர் சமுதாயத்தை சேர்ந்த தமிழகத்தில் வாழும் அனைவரின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபளிக்கும் வகையில் 110 விதியின் கீழ் பிறந்தநாளை அரசு விழாவாக நடத்திட அறிவிப்பு செய்து பெறுமை சேர்த்தவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு என்பதை தெரிவித்துகொள்கிறேன். 

ராவ்பகதூhர் குரூஸ்பர்ணாந்தீஸ் அவர்கள் தூத்துக்குடியில் 15.11.1869ஆம் ஆண்டு பிறந்தார். தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909 முதல் ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ்  ஆவார். தூத்துக்குடி நகர மக்களுக்கு  குடிநீர் பஞ்சம் பெரும் பிரச்சனையாக இருந்தது. தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் இலங்கையில் கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்தார். ஆனாலும் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பின்னர் கடம்பூரிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதுவும் போதுமானதாக இல்லை. கோரம்பள்ளம் குளத்திலிருந்து கால்வாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆயினும் இதுவும் பொது மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை.

கடற்கரை நகரமான தூத்துக்குடி நகரமக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண 24 மைல் தூரமுள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திக்கரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக செயல்படுத்தினார்.  இதன் காரணமாக இன்றளவும் தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டதற்கு திரு,குரூஸ் பர்ணாந்தீஸ் எடுத்த சீறிய முயற்சிதான் காரணமாகும். இவரது பிறந்த நாளினை எங்களது  செய்தி மற்றும் விளம்பரத்துறையின் சார்பில்  அரசு விழவாக  அறிவிக்கும் அரசாணை வெளியிட்டதை எனது பாக்கியமாக கருதுகிறேன். ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களுக்கு தூத்துக்குடி மக்கள் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அதுவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெயசீலன்,இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப.,  மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட கூட்டுறவு நகர வங்கி தலைவர் திரு.மா.சுதாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.ஜஸ்டிக், சிலை பராமரிப்பாளர் திரு.ஜெனோ ரவேல், முக்கிய பிரமுகர்கள் திரு.ஆறுமுக நயினார் திரு.திருப்பாற்கடல், திரு.ஆர்.மனோஜ்குமார், திருமதி.செரினா பாக்கியராஜ், திரு.புல்டன் ஜெசீன், திரு.ஏசாதுரை, திரு.ஜெ.தனராஜ், திரு.ஜவகர், திரு.மணப்பாடு கயேஷ்.  பரதர் நல சங்க தலைவர் திரு.பீட்டர் பெர்ணான்டோ, ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் நற்பணி மன்ற தலைவர் திரு.ஜெர்மன் கில்டு , செயலாளர் திரு.சசிகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) திரு.ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 


தமிழக அரசின் சார்பில் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் 151 வது பிறந்த நாள் விழா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...