முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு. பாராட்டு

 .

    கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு. பாராட்டு

தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்  ஆய்வாளர்  உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

தூத்துக்குடி  மாவட்டம், குலசேகரபட்டினத்தில் 17.10.2020 முதல் 26.10.2020 வரை நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்;து பணிகளை திறம்பட செய்த குலசேகரபட்டினம் காவல் ஆய்வாளர் திருமதி. ராதிகா, திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு  உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், திருச்செந்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. தாமஸ் மேத்யூ மற்றும் குலசேகரபட்டினம் காவல் நிலைய காவலர் திரு. தங்கபாண்டியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மளவராயநத்தம் கிராமத்தை சேர்ந்த போக்கிரி முத்து என்பவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட தோழப்பன்;பண்ணை பகுதியில் ஆயுதத்துடன் சுற்றிதிரிந்தவரை கைது செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் திரு. சுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

  காவல் ஆய்வாளர்  உட்பட 8 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. கோபி, திரு. செல்வன், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப மற்றும் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சஞ்சீவ் குமார் ஆகியோர்  உடனிருந்தனர்.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...