முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம்

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம


                  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக கே. செந்தில்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக மீன்வளத் துறை மேலாண்மை இயக்குநராக இருந்த எஸ். சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி மாற்றப்பட்டுத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கே. செந்தில் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பொறுப்பு) இயக்குநராக இருந்த விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக இருந்த மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக இருந்த  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே. ஜெயகாந்தன், மீன் வளர்ச்சி கழக இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எஸ். கந்தசாமி, இ-சேவை, குறைதீர் அமைப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக  ஜெஸிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக எஸ். திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...