முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி




 .

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 6ம் திருநாளான சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்றார் 

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 6ம் திருநாளான சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.11.2020) பங்கேற்று தரிசனம் செய்தார். தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.முருகன், இ.கா.ப.,  தென்மண்டல துணை காவல் துறை தலைவர் திரு.பிரவீண்குமார் அபிநவ், இ.கா.ப., ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிட் 19 காரணமாக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளை பின்பற்றி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள அனுமதியில்லை. விழாவில் கலந்துகொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு அனைவரும் முககவசம் அணிந்து, சாணிடைசர், கை கழுவுதல் உள்ளிட்ட விழிப்புணர்வுடன் விதிகளை பின்பற்றி நடைபெற்றது. கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவதை நாடெங்கிலும் உள்ள பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் கோயில் நிர்வாகத்தின் மூலமும் பல்வேறு தொலைக்காட்சிகள் மூலமும் நேரலை செய்யப்பட்டது. யுடியுப் மூலமும் நேரலை செய்யப்பட்டது.  

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.ஜெயசீலன், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார், இ.கா.ப., கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு,ஹர்ஷ்சிங், இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்கார் திரு.கண்ணன் ஆதித்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, திருக்கோயில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி, உதவி ஆணையர் திரு.செல்வராஜ், வட்டாட்சியர் திரு.முருகேசன், முன்னாள் தக்கார் திரு.கோட்டை மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...