கண மழையை பொருப் படுத்தாமல் கடமையாற்றிய போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி . நேரில் பாராட்டு

 கண மழையை பொருப் படுத்தாமல் கடமையாற்றிய போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி . நேரில் பாராட்டு




தூத்துக்குடியில் பெய்துவரும் அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் போக்குவரத்து காவலரின் கடமையுணர்வை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், அவர் பணி செய்து வரும் இடத்திற்கே நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

 தூத்துக்குடியில் இன்று (16.11.2020) கன மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கியமான இடமான வி.வி.டி சிக்னல் என்னும் நான்கு முக சந்திப்பு அதிக போக்குவரத்து கொண்டதாகும். 


இன்று பெய்து வரும் கன மழையில் தூத்துக்குடி தென்பாகம் போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் திரு. முத்துராஜ் மழையை பொருட்படுத்தாமல் மக்களுக்கு பணி செய்வதே காவல்துறையின் தலையாய பணி என கடமையுணர்வுடன் அந்த முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டு வருகிறார். இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும்    அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 


மேலும் கடமையுணர்வோடு கனமழையைக்கூட பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மேற்படி போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் திரு. முத்துராஜை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அந்த முக்கிய சந்திப்பான தூத்துக்குடி வி.வி.டி சிக்னலுக்கு நேரில் சென்று அங்கு போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த காவலர் முத்துராஜ்க்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். 


இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மற்றும் போக்குவரத்துப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்