முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு

   



                                                     தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு, மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வளாகத்தில் இன்று (01.11.2020) மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார். 

மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மட்டும் 100 மரக்கன்றுகள், அதே போன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலும் மரக்கன்றுகள் நட்டு, அங்கும் மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்துள்ளார். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்கள், வல்லநாடு துப்பாக்கி சுடுதளம், மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானம் உள்ளிட்ட இடங்களில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் 12,000 மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.   

மாவட்ட காவல்  கண்காணிப்பாளரை தொடர்ந்து தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. செல்வன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர் திரு. மணிகண்டன், திரு. ஈஸ்வரமூர்த்தி, திரு. சுனைமுருகன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. லிவிங்ஸ்டன்  உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மரக் கன்றுகளை நட்டனர். 

பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்கள் ஆகியவற்றை சுற்றி சுத்தம் செய்து, காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள், செடிகள் வைக்கப்பட்டு வருகிறது என்றும்,

கடந்த சில நாட்களுக்கு முன் 96 ஏக்கர்  நிலபரப்புள்ள வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் 10,000 பனைமர கன்றுகள் நடப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த மரக்கன்றுகள் செழித்து வளரும்.    மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் நாம் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். எல்லா நாடுகளிலும் மூன்றில் ஒரு பங்கு காடு வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மரக்கன்றுகள் நடுவது இன்றோடு முடிவதல்ல, தினமும் நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நட்டு, வருங்கால சந்ததியினருக்கு வளமான நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றி, காவல் துறையினருக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார். 

இந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், தமைக்காவலர் திரு. ராஜா, திரு. வீரபாகு உட்பட காவல்துறையினர் செய்திருந்தனர். 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...