முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தி.மு.க.தான் தமிழகத்தில் ஆட்சியை நடத்துகிறது - தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேச்சு

 

 தி.மு.க.தான்    தமிழகத்தில் ஆட்சியை  நடத்துகிறது -                                    தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேச்சு

வெள்ளி 6, நவம்பர் 2020 9:13:57 AM (IST)




தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்று சந்தேகம் உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பது தி.மு.க. தான் என கனிமொழி எம்பி பேசினார். 

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க.  சார்பில் கலைஞர் அரங்கில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கு தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.

அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது: இயற்கை ஒரு பெரிய சவாலை உலகத்தை நோக்கி வீசி உள்ளது. அதனை தாண்டி இங்கு கொள்கை ரீதியாக சவால்கள் வீசப்படுகிறது. நமக்கு உரிமைகளை மறுத்து சவால்கள் வீசப்படுகின்றன. இயற்கை சவாலாக இருந்தாலும், உரிமை மறுப்பு சவாலாக இருந்தாலும், அனைத்தையும் வென்று நிற்கும் இயக்கம் தி.மு.க.தான்.

தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்று சந்தேகப்படும் அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்சி பொறுப்பையும் தி.மு.க. தலைவரே எடுத்து நடத்த வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் ஜி.எஸ்.டி. வரி வசூலித்து விட்டது. அதனை வேறு செலவுகளுக்கு எடுத்து செலவு செய்து விட்டதாக மத்திய தணிக்கைக்குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதன் பிறகும், உரிமைக்காக அ.தி.மு.க. அரசு குரல் எழுப்பவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் ஆளும் கட்சியினர் கவர்னரை வலியுறுத்தாமல் அமைதியாக இருந்தார்கள். தி.மு.க. போராட்டம் நடத்திய பிறகே கவர்னர் கையெழுத்து போட்டார். தமிழக அரசுக்கு வர வேண்டிய உரிமைகளை கூட மீட்டெடுக்க போராட வேண்டிய இயக்கமாக தி.மு.க. உள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை பற்றி கூட கவலைப்படாமல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. ஆனால் தவறு நடக்காமல் தடுக்க வேண்டும் என்ற முன்னெடுப்பை தி.மு.க. எடுத்து உள்ளது. ஆகையால் இங்கு ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பதும், எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதும் தி.மு.க. தான்.

தமிழகத்தில் பா.ஜனதா அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. அதனை அ.தி.மு.க. அரசு தட்டிக் கேட்கவில்லை. மாநில உரிமைகள், மொழி உரிமைகள், அடையாளங்களை மத்திய அரசிடம் அடகு வைத்துக் கொண்டு இருக்கிறது. இவர்கள் செய்யும் தவறை தொடர்ந்து செய்ய, மத்திய அரசு கவசமாக உள்ளது. இந்த கூட்டணியை உடைத்தெடுத்து தமிழகத்தை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பரமன்குறிச்சியில் நடந்த விழாவில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 3 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள தி.மு.க. மூத்த முன்னோடிகள் 619 பேருக்கு பொற்கிழிகளை வழங்கினார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக பேசினார். மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, பிரம்மசக்தி, பில்லா ஜெகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...