முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவிப்பு

 தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 31 ஆண் நபர்கள் 9 பெண் நபர்கள் ஊர்க்காவல் படை வீரர்களாக (ர்ழஅந புரயசனள) தேர்வு செய்யப்பட உள்ளனர். 


இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும், 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.                 

இதில் ஆர்வம் உள்ள பொதுமக்கள், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுய தொழில்புரிவோர் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 


மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் 2 மார்பளவு புகைப்படம் (Pயளளிழசவ ளுணைந phழவழ), கல்வித்தகுதிச் சான்று, ஆதார் அட்டை மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்களுடன் வரும்   24.11.2020 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு  தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் (னுளைவசiஉவ Pழடiஉந ழுககiஉந) நேரில் ஆஜராக வேண்டும்.


ஊர்க்காவல் படைவீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவல்துறையினரின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். 


ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே  பணி வழங்கப்படும். அவ்வாறு பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூபாய் 560ஃ- வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் இத்தேர்வுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...