உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி எற்பு நிகழ்ச்சி


உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி.

-------------------------------------------------------------------------------------------.                                                                       



          அன்னம்மாள் கல்லூரி வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி சார் ஆட்சியர்  திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்; உறுதிமொழி எடுக்கப்பட்டது.

                  உலக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தின செய்தியாக சார் ஆட்சியர் அவர்கள்  கூறியது  எச்.ஐ.விஃஎய்ட்ஸ் என்பது தனி மனித நோய் மட்டுமல்ல இது ஓரு பொது சுகாதார சமுதாய பிரச்சினை என்பதை உணர்வோம். எனவே நாம் அனைவரும் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பற்றி சரியான தகவலை முழுமையாக  அறிந்திடுவோம். நாம் தெரிந்து கொண்டவற்றை நமது குடும்பங்களிலும் நமது சமுதாயத்திற்கும் தெரியப்படுத்துவோம்.

                     எச்.ஐ.விஃஎய்ட்ஸ் பரவுதலை தடுக்க புதிய எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படாமல் இருக்க நாம் எந்தவித தயக்கமின்றி எச்.ஐ.விக்கான இரத்த பரிசோதனையை நமக்கான எச்.ஐ.வி நிலையை இலவசமாக அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பரிசோதித்து தெரிந்து கொள்வோம். அதே போல் நமது குடும்பங்களையும் சமுதாயத்தையும் எச்.ஐ.விக்கான இரத்த பரிசோதனைக்கு ஊக்குவித்து அனைவரும் தங்கள் எச்.ஐ.வி நிலையை அறிந்து கொள்ள செய்வோம். எச்.ஐ.வி நோயால்; பாதிக்கப்பட்ட தனிநபரையும் அவரது குடும்பத்தையும் எவ்வித பாகுபாடு இல்லாமல் அரவணைப்போம்.

              2020 ம் வருட உலக எய்ட்ஸ் தினக் கருத்து  ‘உலகளாéய ஒ‰றுமை ஃ பொறு¥பை இ¥பேçட® கால§கëல் ப»®ªது கொŸளுதல் தூத்துக்குடி மாவட்டத்;தில் முழுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தூத்துக்குடி சார் ஆட்சியர்  திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார். மாவட்ட ஏ. ஆர்.டி. மருத்துவ அலுவலர் மரு. பாண்டியன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்