முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை .

 தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை .                                         




தூத்துக்குடி  மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (31.12.2020) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மருத்துவதுறையினர், அதிலும் சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மிகப்பெரிய பலன் கிடைத்து வருகிறது. கபசுரக் குடிநீர் குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக உள்ளது என்றும், 


தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளது என்று முகக்கவசம் அணியாமலும,; சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்து விடக்கூடாது. தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலை இருப்பதால்; தொடர்ந்து முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும்.  தகுந்த முறையில் கபசுரக் குடிநீர் அருந்துதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம்  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் என்றும் இந்த சித்த மருத்துவ கண்காட்சி மூலம் அன்றாடம் நாம் உண்ணக்கூடிய உணவுகள் பற்றியும் அதன் பயன்களை தெரிந்து கொள்ளலாம், நமது உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.  


இந்த நிகழ்ச்சயில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் திருமதி. ராஜசெல்வி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர். திரு. சங்கர ராம சுப்பிரமணியன், முள்ளக்காடு ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் திருமதி. திலகவதி அரியநாச்சி, உதவி மருத்துவ அலுவலர் டாக்டர். பிரீத்தா மற்றும் மருந்தாளுநர் திருமதி. ஞான சௌந்தரி, உதவியாளர் திரு. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான், ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர் திரு. மணிகண்டன், திரு. ஈஸ்வர மூர்த்தி, திரு. நடராஜன்  மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...