முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு


தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு

------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான மிளகாய் 30 குறுவட்டங்களிலும், கொத்தமல்லி 11 குறுவட்டங்களிலும்,  வெங்காயம் 21 குறுவட்டங்களிலும், வாழைப் பயிர் 27 குறுவட்டங்களிலும், வெண்டை 1 குறுவட்டத்திலும் பயிர் காப்பீடு செய்து பயன் அடைய நடப்பாண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்பாராத இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டம் 2020 - 2021-ன்கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம்.

விண்ணப்படிவம், உறுதி மொழிபடிவம், கிராம நிர்வாக அலுவலரிமிருந்து பெறப்பட்ட 10-1 அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை ஒளி நகல் ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

மிளகாய் பயிருக்கு 30.01.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.1இ089ஃ-ம், வாழை பயிருக்கு 01.03.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.3இ115ஃ-ம், கொத்தமல்லி பயிருக்கு 30.01.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.400ஃ-ம், வெங்காயம் பயிருக்கு 15.02.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.945ஃ-ம், வெண்டை பயிருக்கு 15.02.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.798ஃ-ம் செலுத்தி காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம்.

இயற்கை இடர்பாடுகள் நிகழுமானால் அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக பயிர்காப்பீடு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்               டாக்டர் கி. செந்தில்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவல

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...