ஆறுமுகநேரியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு .

 

ஆறுமுகநேரியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு .

.  

    


(08.01.2021) ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில்; ஆறுமுகநேரி காவல் நிலையத்திலிருந்து தொடங்கி ஆறுமுகநேரி பஜார், காயல்பட்டினம் இரயில்வேல்கேட் பாதை வழியாக பேயன்விளை சென்று நிறைவடைந்தது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறியதாவது இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்  இன்று காவல்துறை அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறை அடையாள அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற்றது. இதே போன்று திருச்செந்தூர், உடன்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். 

இந்த அணிவகுப்பில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ.கா.ப, பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சஞ்சீவ் குமார், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கண்ணன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி, குலசை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ராதிகா, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் நிலைய காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள்;, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் உட்பட 300 காவல்துறையினர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்