முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் 

டாக்டர்  கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்  கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.01.2021) கொடியசைத்து துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். மோட்டார் சைக்கிள் பேரணியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டனர். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி, 3ம் மைல், விவிடி சிக்னல் வழியாக குருஸ் பர்னாந்து சிலை அருகில் முடிவுற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்  கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

மத்திய அரசினால் சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஒரு வார காலம் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா ஒரு மாத காலம் நடத்தப்படுகிறது. சாலை பாதுகாப்பு விழா, சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற மையக்கருத்தில் அடிப்படையில் 18.01.2021 முதல் 17.02.2021 வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விழாவினையொட்டி போக்குவரத்துறை, காவல் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், கார் ஏஜென்டுகள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவினை துவக்கி வைக்கும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று துவக்கி வைக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விழாவையொட்டி ஹெல்மெட் அணிதல், சாலை விதிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு மாதம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 

போக்குவரத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 19.01.2021 அன்று நெடுஞ்சாலைகளில் செல்பவர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், ரயில் நிலையம், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் 20.01.2021 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மகளிர்கள் பங்கேற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி 21.01.2021 அன்று நடைபெறுகிறது. குடியரசு தினமான 26.01.2021 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும், 29.01.2021 அன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்கள் நடைபெறுகிறது. 

பெண்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கள் 11.02.2021 அன்று நடைபெறுகிறது. போக்குவரத்து வாகனங்கள் மற்றும் டிராக்டர்களுக்கு 15.02.2021 அன்று சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ஒளி எதிரொலிப்பு டேப்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாகன ஓட்டுநர்களுக்கு மன அழுத்தத்தினை குறைக்கும் வழிமுறைகள் தொடர்பான நிகழ்ச்சிகள் 16.02.2021 அன்று நடைபெறுகிறது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளை பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உள்ளார்கள். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இல்லா நிலையை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.விநாயகம் (தூத்துக்குடி), திரு.நெடுஞ்செழியன் (கோவில்பட்டி), மோட்டார் ஆய்வாளர்கள் திரு.மாசிலாமணி, திரு.குமார், திரு.ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...