முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம்.

      



தூத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில்  (08.01.2021)  அன்று நடைபெற்ற இந்த கிராம விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசுகையில், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்;தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் அனைத்து கிராமங்களுக்கும் கிராம விழிப்புணர்வு காவல்துறை அதிகாரியாக ஒவ்வொரு காவலர்களை நியமித்துள்ளோம். அதன்படி இந்த ஆழ்வார்கற்குளம் கிராமத்திற்கு காவலர் திரு. நாகராஜ் என்பவரை நியமித்துள்ளோம்.  அவர் கிராமத்தில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தெரியப்படுத்தி அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.   அதே போன்று உங்கள் பகுதிக்கு பஸ் வரவேண்டும் என்று கூறியிருந்தீர்கள் பஸ் ரூட் 16 சி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.                                                                                                                                                                       அதே போன்று ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு கடைசி வரை பஸ் வரவேண்டும் என்று கூறியிருந்தீர்கள், அதற்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து ஏற்பாடு செய்யப்படும். உங்கள பகுதியில் உள்ள பிரச்சனைகளை காவல்துறைக்கு தெரிவித்தால் அவற்றை தீர்த்து வைப்பதற்கு காவல்துறை தயாராக உள்ளது. ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் போன்ற கிராமங்களில் இதுபோன்ற கூட்டம் நடத்தப்பட்டபோது, வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்று கூறியிருந்தோம். அதன்படி ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு படித்த இளைஞர்கள் வேலை வாங்கித்தர வேண்டும் என்று கூறியிருந்தார், அவருக்கு தூத்துக்குடி அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக்கொடுத்துள்ளோம். அதே போன்று உங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வேண்டும் என்றால், அருகில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதற்கு ஏற்பாடு செய்வோம்.                                                                                                                                                              காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் ஒரு இணக்கமான நல்ல சூழல் உருவாக வேண்டும். காவல்துறை உங்களுக்காக எப்போதும் உழைக்கத் தயாராக உள்ளோம் என்ற பல்வேறு நல்ல கருத்துக்களை கூறி தனது உரையை நிறைவு செய்தார். 

இக்கூட்டத்தில் ஆழ்வார்கற்குளம் ஊர்த்தலைவர் திரு. முருகன், பஞ்சாயத்து தலைவர் திருமதி. முத்துக்குமாரி, காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், காவல் ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன், உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...