முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

" கோவிட்‌ 19 " நடைமுறைகளை பின்பற்றி திருச்செந்தூர்‌ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா கொண்டாடுதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா தொடர்பான ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ கோவிட்‌ 19 நடைமுறைகளை பின்பற்றி திருவிழா கொண்டாடுதல்‌ தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்‌ - மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு.கி. செந்தில்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌

தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌  மாசித் திருவிழா 17.02.2021 முதல்‌ 28.02.2021 வரை கொண்டாடுதல்‌ தொடர்பான முன்னேற்பாடுகள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ வைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ தமிழக அரசால்‌ அறிவிக்கப்பட்ட கோவிட்‌-19 ஊரடங்கு நடப்பில்‌ உள்ள நிலையில்‌ திருக்கோயில்களில்‌ திருவிழாக்கள்‌ நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால்‌ வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும்‌ இல்லாத வகையில்‌ நடத்துதல்‌ தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்‌.

தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா 17.02.2021 முதல்‌ 28.02.2021 வரை 12 தினங்கள்‌ கொண்டாடப்படுகிறது. இதில்‌ 1-ம்‌ திருநாள்‌ (17.02.2021) அன்று கொடியேற்றம்‌ நிகழ்ச்சியும், 5-ம்‌ திருநாள்‌ (21.02.2021) குடைவரை வாயில்‌ தீபாராதனை நிகழ்ச்சியும்‌,  7-ம்‌ திருநாள்‌ (23.02.2021) உருகு சட்ட சேவை, வெற்றிவேர்‌ சப்பரம்‌ எழுந்திருப்பு, சிவப்பு சாத்தி நிகழ்ச்சிகளும்‌, 8-ம்‌ திருநாள்‌ (24.02.2021) பச்சை சாத்தி நிகழ்ச்சியும்‌, 10-ம்‌ திருநாள்‌ (26.02.2021) தேரோட்டம்‌ நிகழ்ச்சியும்‌, 11-ம்‌ திருநாள்‌(27.02.2021) தெப்ப உற்சவமும்‌ மிக முக்கிய நிகழ்வுகளாகும்‌.

மாசித் திருவிழா நிகழ்ச்சியில்‌ தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில்‌ பக்தர்கள் வருகை தருவார்கள்‌. இந்த ஆண்டு சுவாமி புறப்பாடு மற்றும்‌ தேரோட்டம்‌ ஆகியன திருக்கோயிலுக்கு வெளியில்‌ நடைபெற உள்ளது. மாசித் திருவிழாவில்‌ 1-ம்‌ திருநாள்‌ கொடியேற்றம்‌ அன்று காலை 5.00 மணிக்கு மேல்‌ 5.30 மணி வரை சுமார்‌ 500 பக்தர்கள்‌ திருக்கோயிலுக்குள்‌ கொடியேற்றம்‌ நிகழ்ச்சி காண அனுமதிக்கப்படுவர்‌. 5-ம்‌ திருநாள்‌ அன்று இரவு 7:30 மணியளவில்‌ குடைவரை வாயில்‌ தீபாராதனை நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1000 பக்தர்கள்‌ நிகழ்ச்சியைக்‌ காண அனுமதிக்கப்படுவர்‌. 

7-ம்‌ திருநாள்‌ (23.02.2021) அன்று அதிகாலை 4.30 மணி முதல்‌ 5.00 மணி வரை நடைபெறவுள்ள உருகு சட்ட சேவை மற்றும்‌ காலை 8.30 மணியளவில்‌ நடைபெறும்‌ வெற்றிவேல்‌ சப்பரம்‌ எழுந்திருப்பு (ஏற்றம்‌ காணல்‌) ஆகிய நிகழ்ச்சிகளைக்‌ காண 1000 பக்தர்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும்‌ சிவப்பு சாத்தி நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 500 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்பட வேண்டும்‌. 8-ம்‌ திருநாள்‌ (24.02.2021) அன்று பகல்‌ 11.30 மணிக்கு நடைபெறும்‌ பச்சை சாத்தி நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1000 பக்தர்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. 10-ம்‌ திருநாள்‌ (26.02.2021) காலை 7.00 மணி முதல்‌ 7.30 மணி வரை நடைபெறும்‌ தேரோட்ட நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1000 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்பட வேண்டும்‌. 11-ம்‌ திருநாள்‌ (27.02.2021) இரவு 10.30 மணிக்கு மேல்‌ நடைபெறும்‌ தெப்ப உற்சவ நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 500 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்பட வேண்டும்‌.

திருக்கோயில்‌ நிர்வாகத்தின்‌ மூலம்‌ மாசித் திருவிழா நிகழ்ச்சிகளை காண வரும்‌ மற்றும்‌திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும்‌ பக்தர்கள்‌ சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள்‌ கண்டிப்பாக முக கவசம்‌ அணிந்து வர வேண்டும்‌. திருக்கோயிலுக்குள்‌ தேவையான இடங்களில்‌ பக்தர்கள்‌ கை கழுவுவதற்கான வசதியும்‌, சானிடைசர்‌ வசதியும்‌ எற்படுத்தி தர வேண்டும்‌. ரதவீதிகள் மற்றும் கோவிலுக்கு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது. தரிசனத்திற்கு வரும்‌ பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்‌, தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ அந்தந்த துறைகளின்‌ மூலம்‌ ஏற்பாடு செய்யப்பட வேண்டும்‌. திருக்கோயில்‌ மூலமாக அன்னதானம்‌ பார்சல்‌ செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்‌.

கொடியேற்றம்‌ நிகழ்ச்சியை பக்தர்கள்‌ திருக்கோயிலுக்கு வெளியிலிருந்து காணும்‌ வகையில்‌ சண்முகவிலாசத்திற்கு வெளியில்‌ (தென்கிழக்கு) பகுதியில்‌ அகன்ற டுநுனு திரை அமைக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்‌.

மேற்கண்ட ஏற்பாடுகளுடன்‌ கோவிட்‌-19 பாதுகாப்பினை பின்பற்றி திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்‌ மாசித் திருவிழா நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்‌ மரு. கி. செந்தில்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

வெளியீடு: செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா தொடர்பான ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ கோவிட்‌ 19 நடைமுறைகளை பின்பற்றி திருவிழா கொண்டாடுதல்‌ தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்‌ - மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு.கி. செந்தில்ராஜ்‌  இ.ஆ.ப.இ அவர்கள்‌ தகவல்‌

தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌  மாசித் திருவிழா 17.02.2021 முதல்‌ 28.02.2021 வரை கொண்டாடுதல்‌ தொடர்பான முன்னேற்பாடுகள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ வைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ தமிழக அரசால்‌ அறிவிக்கப்பட்ட கோவிட்‌-19 ஊரடங்கு நடப்பில்‌ உள்ள நிலையில்‌ திருக்கோயில்களில்‌ திருவிழாக்கள்‌ நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால்‌ வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும்‌ இல்லாத வகையில்‌ நடத்துதல்‌ தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்‌.

தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா 17.02.2021 முதல்‌ 28.02.2021 வரை 12 தினங்கள்‌ கொண்டாடப்படுகிறது. இதில்‌ 1-ம்‌ திருநாள்‌ (17.02.2021) அன்று கொடியேற்றம்‌ நிகழ்ச்சியும்இ 5-ம்‌ திருநாள்‌ (21.02.2021) குடைவரை வாயில்‌ தீபாராதனை நிகழ்ச்சியும்‌இ  7-ம்‌ திருநாள்‌ (23.02.2021) உருகு சட்ட சேவைஇ வெற்றிவேர்‌ சப்பரம்‌ எழுந்திருப்புஇ சிவப்பு சாத்தி நிகழ்ச்சிகளும்‌இ 8-ம்‌ திருநாள்‌ (24.02.2021) பச்சை சாத்தி நிகழ்ச்சியும்‌இ 10-ம்‌ திருநாள்‌ (26.02.2021) தேரோட்டம்‌ நிகழ்ச்சியும்‌இ 11-ம்‌ திருநாள்‌(27.02.2021) தெப்ப உற்சவமும்‌ மிக முக்கிய நிகழ்வுகளாகும்‌.

மாசித் திருவிழா நிகழ்ச்சியில்‌ தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில்‌ பக்தர்கள் வருகை தருவார்கள்‌. இந்த ஆண்டு சுவாமி புறப்பாடு மற்றும்‌ தேரோட்டம்‌ ஆகியன திருக்கோயிலுக்கு வெளியில்‌ நடைபெற உள்ளது. மாசித் திருவிழாவில்‌ 1-ம்‌ திருநாள்‌ கொடியேற்றம்‌ அன்று காலை 5.00 மணிக்கு மேல்‌ 5.30 மணி வரை சுமார்‌ 500 பக்தர்கள்‌ திருக்கோயிலுக்குள்‌ கொடியேற்றம்‌ நிகழ்ச்சி காண அனுமதிக்கப்படுவர்‌. 5-ம்‌ திருநாள்‌ அன்று இரவு 7:30 மணியளவில்‌ குடைவரை வாயில்‌ தீபாராதனை நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1000 பக்தர்கள்‌ நிகழ்ச்சியைக்‌ காண அனுமதிக்கப்படுவர்‌. 

7-ம்‌ திருநாள்‌ (23.02.2021) அன்று அதிகாலை 4.30 மணி முதல்‌ 5.00 மணி வரை நடைபெறவுள்ள உருகு சட்ட சேவை மற்றும்‌ காலை 8.30 மணியளவில்‌ நடைபெறும்‌ வெற்றிவேல்‌ சப்பரம்‌ எழுந்திருப்பு (ஏற்றம்‌ காணல்‌) ஆகிய நிகழ்ச்சிகளைக்‌ காண 1000 பக்தர்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும்‌ சிவப்பு சாத்தி நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 500 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்பட வேண்டும்‌. 8-ம்‌ திருநாள்‌ (24.02.2021) அன்று பகல்‌ 11.30 மணிக்கு நடைபெறும்‌ பச்சை சாத்தி நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1000 பக்தர்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. 10-ம்‌ திருநாள்‌ (26.02.2021) காலை 7.00 மணி முதல்‌ 7.30 மணி வரை நடைபெறும்‌ தேரோட்ட நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1000 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்பட வேண்டும்‌. 11-ம்‌ திருநாள்‌ (27.02.2021) இரவு 10.30 மணிக்கு மேல்‌ நடைபெறும்‌ தெப்ப உற்சவ நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 500 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்பட வேண்டும்‌.

திருக்கோயில்‌ நிர்வாகத்தின்‌ மூலம்‌ மாசித் திருவிழா நிகழ்ச்சிகளை காண வரும்‌ மற்றும்‌திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும்‌ பக்தர்கள்‌ சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள்‌ கண்டிப்பாக முக கவசம்‌ அணிந்து வர வேண்டும்‌. திருக்கோயிலுக்குள்‌ தேவையான இடங்களில்‌ பக்தர்கள்‌ கை கழுவுவதற்கான வசதியும்‌இ சானிடைசர்‌ வசதியும்‌ எற்படுத்தி தர வேண்டும்‌. ரதவீதிகள் மற்றும் கோவிலுக்கு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது. தரிசனத்திற்கு வரும்‌ பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்‌இ தற்காலிக கழிப்பறை வசதிஇ மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ அந்தந்த துறைகளின்‌ மூலம்‌ ஏற்பாடு செய்யப்பட வேண்டும்‌. திருக்கோயில்‌ மூலமாக அன்னதானம்‌ பார்சல்‌ செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்‌.

கொடியேற்றம்‌ நிகழ்ச்சியை பக்தர்கள்‌ திருக்கோயிலுக்கு வெளியிலிருந்து காணும்‌ வகையில்‌ சண்முகவிலாசத்திற்கு வெளியில்‌ (தென்கிழக்கு) பகுதியில்‌ அகன்ற டுநுனு திரை அமைக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்‌.

மேற்கண்ட ஏற்பாடுகளுடன்‌ கோவிட்‌-19 பாதுகாப்பினை பின்பற்றி திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்‌ மாசித் திருவிழா நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்‌ மரு. கி. செந்தில்ராஜ்‌இ இ.ஆ.ப.இ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...