கோவில்பட்டியில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்.

 


ISRP Expo - புதிய தலைமுறை அறக்கட்டளை,அபிராமி சர்வீசஸ் மற்றும் கோவில்பட்டி இலக்கிய உலா இணைந்து கோவில்பட்டி பைரவா மஹாலில் 7-2-2021. ஞாயிறு கிழமை அன்று தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது                                                                                            

                                                                              

இதில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன்,தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் கிளை மேலாளர் முருகன்,MSMEன் உதவி இயக்குநர் ஜெரினா பபி,தூத்துக்குடி மாவட்ட முதன்மை வங்கி SBI முதன்மை மேலாளர் யோகானந்த் ஈஸ்வர் ஆகியோர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள்,மானியங்கள்,வங்கி கடனுதவித்திட்டங்கள் குறித்து தகவல் அளித்தனர்.புதிய தலைமுறை அறக்கட்டளையின் மண்டல மேலாளர் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.அபிராமி சர்வீசஸ் உரிமையாளர் முருகன் மற்றும் ஆசியா பார்ம்ஸ் பாபு தங்களது தொழில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இலக்கிய உலா நிறுவனர் இரவீந்தர் நன்றியுரை வழங்கினார்.தொழில் முனைவோர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்