முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் - மாவட்ட தேர்தல் அலுவலர். ஆலோசனை கூட்டம்

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021 தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.02.2021) நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  - மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 53 வாக்குசாவடிகளும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்123 வாக்குசாவடிகளும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 77 வாக்குசாவடிகளும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 56 வாக்குசாவடிகளும், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 92 வாக்குசாவடிகளும்,  கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 93 வாக்குசாவடிகளும் என மொத்தம் 494 வாக்குசாவடிகள் 1050 வாக்காளர்களுக்கு மேல் வாக்குசாவடிகள் இங்கு  ஏ, பி என துணை வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.  வாக்குசாவடிகளில் வீட்டு கதவு எண் இலக்கத்தின்படி வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு துணை வாக்குசாவடிக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும். இதில் வாக்காளர் பதிவு அலுவலர் ஃ உதவி வாக்காளர் பதிவு அலுவலர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனையின்படி இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதன்மை வாக்குசாவடிகள் 1603, துணை வாக்குசாவடிகள் 494 அமைக்கப்பட்டவுடன் மொத்த வாக்குசாவடிகள் 2097ஆக அதிகரிக்கும். 

துணை வாக்குசாவடிகள் 494 அமைக்கப்படும்போது 23 வாக்குசாவடிகள் இடமாற்றமும், 26 வாக்குசாவடிகள் கட்டிட மாற்றமும், 7 வாக்குசாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்பட பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தற்போது அமைக்கப்பட உள்ள 494 துணை வாக்குசாவடிகளில் 476 துணை வாக்குசாவடிகள் ஏற்கனவே உள்ள முதன்மை வாக்குசாவடிகள் அமைந்துள்ள அதே பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. 18 துணை வாக்குசாவடிகள் முதன்மை வாக்குசாவடிகள் அமைந்துள்ள வளாகத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் மாற்று இடத்தில் அமைக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் தாங்கள் தெரிவித்துள்ளவாறு மாற்றங்கள் செய்யப்பட்டு இன்னும் 2 தினங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வாக்குசாவடிகள் அமைக்கப்படும் விவரங்கள் தங்களுக்கு  வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தங்களது ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என பேசினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் திருமதி.சரண்யாஅரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், கோட்டாட்சியர்கள் திரு.சங்கரநாராயணன் (கோவில்பட்டி), செல்வி.தனப்ரியா(திருச்செந்தூர்), அரசியல் கட்சி பிரமுகர்கள் திருமதி.கீதாஜீவன், எம்.எல்.ஏ. (தி.மு.க.), திரு.சந்தானம் (அ.இ.அ.தி.மு.க.), திரு.எம்.எஸ்.முத்து(சி.பி.எம்.), திரு.அசோக்குமார்(பி.எஸ்.பி.), திரு.பாலசிங் (காங்கிரஸ்), திரு.ராமகிருஷ்ணன்(தே.மு.தி.க.) மற்றும் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்கள், துணை வாக்குப்பதிவு அலுவலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...