முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் - காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட - எஸ்.பி பாராட்டு

 


தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 

கடந்த 30.01.2020 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின் பறிப்பில் வழக்கின் எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1,00,000ஃ- மதிப்புள்ள 5 சவரன் நகையை பறிமுதல் செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஐயப்பன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. முருகன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,


கடந்த 03.02.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கின் எதிரிகள் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 2,28,000ஃ- மதிப்புள்ள 7 சவரன் நகையை பறிமுதல் செய்த கயத்தாறு காவல் நிலையம் ஆய்வாளர் திரு. முத்து, உதவி ஆய்வாளர் திரு. அரி கண்ணன், காவலர்கள் திரு. பாலகிருஷ்ணன், திரு பாலமுருகன், திரு. சத்ரியன், திரு. குருசாமி, திரு. கார்த்திக் ஊர்க்காவல் படை காவலர், திரு. சங்கர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருட்டு சம்பந்தமாக பல்வேறு இடங்களில் ரோந்து செய்ததில் சட்டவிரோதமாக 6 இரு சக்கர வாகனங்களில் தலா 5 மூடை மணலுடன் வந்தவர்களை கைது செய்து மணலை கைப்பற்றி குளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாத பாண்டியன், முதல்நிலைக் காவலர்கள் திரு. செல்வகுமார், திரு. இராசையா, காவலர் திரு. ஜோசப் சந்திரசேகர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காணாமல் போன வயதான பெண்மணி மாரியம்மாள் என்பவர் நாலாட்டின்புதூர் சரவணபவன் ஹோட்டல் அருகில் நின்றவரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சீனிவாசன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஜெயராஜ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,


2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 17 எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராய்ஸ்டன், தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அசோக்குமார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்.

  

2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 


 இப்பாராட்டு நிகழச்சியின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...