முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி


  

---

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்; மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு இன்று (15.03.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்.    

         . .                                  .                                     .                                                                 பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்ஃமாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு இருசக்கர வாகனத்ததின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் கையொப்பமிட்டனர்.                                                          


                    .                                                                                                                                இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி 3ம் மைல், பாலிடெக்னிக், மில்லர்புரம், விவிடி சிக்னல், கோர்ட் வளாகம் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதன் மூலம் பல்வேறு பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மனசாட்சிப்படி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாங்காமல் ஜனநாயகத்தின் கடமையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

          . .  .  . . .                                                                                                                             நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரமநாயகம், வட்டார போக்குவரத்து அலுவலர் (தூத்துக்குடி) திரு.விநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.சதீஸ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...