தூத்துக்குடி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் : கீதாஜீவன்

 

தூத்துக்குடி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் : கீதாஜீவன் 



தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய எம்.எல்.ஏவும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் வெற்றி பெற்றுள்ளார்.


தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய எம்.எல்.ஏவும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயசீலனை விட 51 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திருச்செந்தூர், கூட்டனி கட்சி போட்டியிட்ட ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய 4 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று தூத்துக்குடி தொகுதி மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ள‌னர். வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்