முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்




தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி. சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கிய சந்திப்புகளான வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பானாந்து சிலை சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு உதவும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக வழங்கப்பட்;ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் வழங்கப்பட்ட காலால் மிதித்து இயக்கக்கூடிய கிருமி நாசினி தெளிப்பான் மற்றும் வெப்பப் பரிசோதனை கருவி ஆகியவற்றையும் பார்வையிட்டார். 


இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் திரு. ஜூடு, செயலாளர் திரு. மகாலிங்கம், திரு. முத்துராமன், ஜெயா இன்ஜினியரிங் திரு. எலையன்ஸ் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். 

இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், வடபாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...